புதிய கீதை -5 (மனிதனும் தெய்வமாகலாம்)
எல்லாப் புகழும் எட்டும் அவர்க்கே!
நல்லார் வாழும் சன்மானம் அதற்கே.!
வல்லார் பிறப்போர்
அவதாரம்
சொல்லேர் சிறப்பவர்
சொல்லேர் சிறப்பவர்
திரு வாசகம்
சாதிக்க முடியா சாதனை எதையும்
சாதிக்குந் துணிவும் இறை அம்சமாகும்.
நீதிக்குள் நின்று நியாயங்கள் செய்தும்
நிந்தனை பொறுப்பதும் தெய்வீக மாகும்.
சுயசுபம் துறப்பதும் புதுயுகம் படைப்பதும்
சுத்த சன்மார்க்க சரணமும் ஆகும்.
பயமது தொலைந்தும் ஜெயம்பெற முயன்றும்
நயம் செயல் முடிப்பதும் அறமாகும்.
தனக்கென எண்ணா தயவுறு உள்ளம்
சாதிக்க முடியா சாதனை எதையும்
சாதிக்குந் துணிவும் இறை அம்சமாகும்.
நீதிக்குள் நின்று நியாயங்கள் செய்தும்
நிந்தனை பொறுப்பதும் தெய்வீக மாகும்.
சுயசுபம் துறப்பதும் புதுயுகம் படைப்பதும்
சுத்த சன்மார்க்க சரணமும் ஆகும்.
பயமது தொலைந்தும் ஜெயம்பெற முயன்றும்
நயம் செயல் முடிப்பதும் அறமாகும்.
தனக்கென எண்ணா தயவுறு உள்ளம்
வணக்கத்திற் குரிய இறை யுறை இல்லம்
மனிதம் சிறந்து புனிதம் நிறைந்தால்
மனிதரும் தெய்வம் என்பதும் பொருந்தும்
துறவிங்கு உலகில் தனியொரு பிறவி
மனிதம் சிறந்து புனிதம் நிறைந்தால்
மனிதரும் தெய்வம் என்பதும் பொருந்தும்
துறவிங்கு உலகில் தனியொரு பிறவி
அகிலம் வணங்கும் துணை தவத்துறவி.
மரணம் இல்லா நிரந்தர உறவன்
வரமென என்றும் இதயத்தில் இறைவன்.
மரணம் இல்லா நிரந்தர உறவன்
வரமென என்றும் இதயத்தில் இறைவன்.
வாடிய பயிர் கண்டு வாடிய
மனிதம்.
தேடிய தெய்வீகம் கூடிய
புனிதம்.
கருணை என்பது கடவுளின் அம்சம்.
இறை நிலை அதுதான் நிதர்சனம்.
கொ.பெ.பி அய்யா.

No comments:
Post a Comment