Thursday, 16 January 2025

தரணி வாழ்க!


தரணி என்றும் வாழும்.

தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.

பேருக்கு ஒன்று தலைமை
ஊருக்கு ஒன்று நிலைமை
ஆளுக்கு ஒன்று அதிகாரம்
யாருக்கு நின்று செயலாகும்?
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.
.
சொந்தம் கூடி கொண்டாடும்
பந்தம் தேடி தந்தாளும்
மந்தை ஒன்று அரசாண்டால்
சந்தை போன்று நாடாகும்.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.

வழக்குகள் எதிர்கொண்டு
இழுக்குகள் புதிர் வென்று
நிலைத் தாள்வார் யார்நின்று.
தலை யொன்று ஆள்வென்று.
உரிமை சமமே காணும்
கடமை கொண்டே நாளும்.
தலைமை ஒன்றே ஆளும்
தரணி என்றும் வாழும்.

வியாபாரிகள் நாடாண்டார்.
வியாபாரமே பாடென்றார்
வேண்டாதார் காடாண்டார்.
வேண்டியவர் வீடாண்டார்.
உரிமை வாழ்வு பறி போச்சு.
உடமை நோவு நெறி ஆச்சு.
தலைமை எங்கோ அதிகாரம்.
நிலைமை இங்கே பரிதாபம்.

கொ.பெ.பிச்சையா.

No comments:

Post a Comment