Thursday, 13 February 2025

துளிரும் உதிரும் சருகாகும்.

துளிரும் சருகாகும்.

ஒவ்வொரு துளிரும் பழுத்துச் சருகாகும்.
எவ்வித உடலும் உழுத்துப் பழசாகும்.
நாளும் முதிர்ந்து இளமை சிதைவாகும்.
காலம் நிறைந்து கோலம் உருமாறும்.

ஏளனம் பேசும் முதுமை உனக்கும்,
நாளெண்ணிப் போடும் காலக் கணக்கும்.
எவ்வுயர் பதவி எத்தனை சிறப்பும்
இருந்தென்ன யோகம்! மருந்தென்ன செய்யும்!

இளமைச் செருக்கும் வாலிப முறுக்கும்,
நிலைமை எவர்க்கும் நிலையென இருக்கும்?
ஏளனக் களிப்பும், முதுமை இழிப்பும்,
நாளை உன்னைப் பதிலுக்குப் பழிக்கும்.

இலைகளை உதிர்த்து
மரங்கள் துளிர்க்கும்.
தலைமுடி வெளுத்து
தளர்வினை உரைக்கும்.
ஆண்டொன்று கடந்தால் வயதொன்று கூடும்.
விதியது நிறைந்தால்
வினையது முடிக்கும்.

கொ.பெ.பிச்சையா.













இதுதான் வாழ்க்கை.

பயணம்

தாயிடம் தொடக்கம் தீயிடம் அடக்கம்.
இடையிலே சிறுபயணம் என்பதுதே வாழ்க்கை. 
வாழ்ந்த வரையும்
 கணக்கென்ன இருப்பு.
வரவு வைப்பான் இறைவன் பொறுப்பு.

வரவின் நோக்கம் வைய்யம் தொடர
பிறப்பின் ஆக்கம் உறவுகள் படர
வளர்வின் காலம் வடிவம் கொடுக்கும்.
நிலவும் சமநிலை செலவில் இருக்கும்

படைப்பின் அவசியம் பகவன் இரகசியம்.
விடைப்பயன் விளக்கம் விளங்கா அதிசயம்.
படைப்பதன் துலக்கம் புலப்படும் விதமே
கிடைப்பது சமூகம் நலப்படும் இதமே.

விஞ்ஞானம் மெஞ்ஞானம் படைப்புகள் உலகில்,
அஞ்ஞானம் அகற்றிய ஆர்வலர் கொடைகள்,
எஞ்ஞான்றும் பயக்கும் இயன்முறை நயன்கள்,
துஞ்சாது நிலைத்துப் படைப்பாளர் வாழ்வர்.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Monday, 10 February 2025

தர்மத்தை வாழ விடு.


தீபாவளி—தீ பாவமழி!

தீபங்கள் ஒளியங்கு தெரியட்டுமே!
தீ பாவம் அழியென்று எரியட்டுமே!
தீ பாவளி சுடரெங்கும் விரியட்டுமே!
தீ பாவம் ஒளி மங்கி ஒழியட்டுமே!?

தர்மங்கள் பிழைத்திங்கு வாழட்டுமே
கர்மங்கள் தழைத்திங்கு ஆளட்டுமே!
வர்மங்கள் கலைந்திங்கு ஓயட்டுமே!
துர்மங்கள் தொலைந்திங்கு மாயட்டுமே!

இனம்சேரா நாய்க்குணம் தீரட்டுமே!
குணம்மாறா மனிதமனம் சேரட்டுமே!
பணம்காக்கும் பேய்க்குணம் மடியட்டுமே!
மனம்பூக்கும் புனிதினம் விடியட்டுமே!

மனிதராய் வாழும் நலம்  பழகட்டுமே!
மனம் பயின்று தேறிபயம் விலகட்டுமே!
வன விலங்காய் தேடும் பகை ஒழியட்டுமே!
இன வொழுங்காய் கூடும் தகை நிலவட்டுமே!

நீதி யென்ன மன்ற மென்ன புரியட்டுமே!
மீதி யென்ன மேன்மை யென்ன அறியட்டுமே!
சாதியென்ன ஆதியென்ன தெளியட்டுமே!
வாதி யென்ன வழக்கு மென்ன ஒழியட்டுமே!

கத்தி யென்ன புத்தி யென்ன தீட்டட்டுமே!
உத்தி யென்ன உண்மை யென்ன மீட்டட்டுமே!
வெற்றி யென்ன தோல்வி யென்ன விளங்கட்டுமே!
முற்றி யென்ன மீட்சியென்ன காட்டட்டுமே!

அறி வென்ன ஆக்க மென்ன விளங்கட்டுமே!
நெறி யென்ன நே ரென்ன துலங்கட்டுமே!
அன் பென்ன பண் பென்ன உணரட்டுமே!
ஆசை யென்ன பாசமென்ன மலரேட்டுமே! 

கோப மென்ன தாப மென்ன வெடிக்கட்டுமே! 
பாவ மென்ன யோக மென்ன படிக்கட்டுமே!
தாக மென்ன மோக மென்ன தேறட்டுமே!
தேக மென்ன  தியாக மென்ன மீறட்டுமே!

ஆசை யென்ன மோச மென்ன தெளியட்டுமே!
நிச மென்ன நாச மென்ன அறியட்டு மே!
வாச மென்ன வாழ் வென்ன நினைக் கட்டுமே!
நேச மென்ன நிலையென்ன முனையட்டுமே!

நாளென்ன விழாவென்ன ஆயட்டுமே!
நமக்கென்ன நலமென்ன தேடட்டுமே!
பாடமென்ன தேடலென்ன படிக்கட்டுமே!
படிப்பென்ன புரிவென்ன துலங்கட்டுமே!

பாசமென்ன நேசமென்ன மலரட்டுமே!
பண்பென்ன அன்பென்ன வளரட்டுமே!
ஈகைஎன்ன இரக்கமென்ன புலரட்டுமே!
இயல்பென்ன தயவென்ன ஒளிரட்டுமே

கொ.பெ.பி.அய்யா.

உணர்ந்து வாழ்க!

வாழ்க சிறந்து.

ஒருவரை ஒருவர் உணர்ந்து புரிந்து
ஒருவரில் மறுவர் ஆதிக்கம் மறந்து.
அன்பும் பாசமும் சமமெனப் பகிர்ந்து--நெஞ்சம்
அமைதி நிறைந்து வாழ்க மகிழ்ந்து.

இன்பம் துன்பம் இரண்டிலும் இணைந்து
எல்லாம் ஒன்றில் ஒருசுதி அமைந்து
நம்பிக்கைத் தன்னில் நாளும் வாழ்ந்து--தன்னிலை
நன்னிலை நின்று வாழ்கச் சிறந்து.

அச்சம் அற்ற நம்பிக்கைக் கொண்டு
உச்சம் காண உன்னில் துணிந்து.
துச்சம் என்றே தூரம் மறந்து--மீதம்
மிச்சம் வாழ வாழ்க முயன்று.

தன்னைத் தாழ்த்தும் தாழ்மை அகற்று.
உன்னை ஏற்றும் உள்ளறி வேற்று.
பின்னை பயத்தின் பேதமை விடுத்து--உன்னை
முன்னை முயன்று வாழ்க அடுத்து.

உருவாக்குத் தெம்பு உன்னை நம்பி
புரட்டலாம் நெம்பு பூமியைத் தம்பி.
அடுத்தவர் உதவிக் கிடைப்பதை நம்பி--வீணே
கெடுவதை உதறி வாழ்கத் தம்பி.

வண்ணத்துப் பூச்சி திண்ணத்தைப் பாரு.
தன்னைத் தூக்க தான்செய்யும் போரு.
எண்ணத்தின் வலிமை கிழிபடும் கூடு--அது போல்
மண்ணில் பரந்து வாழ்க நீடு.

பொன்னிகர் மாட்சி தன்னுயர் காட்சி.
உன்னறித் தேடல் உள்ளறி நீட்சி.
மண்ணுயர் மாந்தர் அன்னவர் சாட்சி--மண்ணில்
மங்கலம் பொங்க வாழ்க நீயே.

கொ.பெ.பி.அய்யா.


உறவின் வேர்.

உறவின் வேர்.

ஊரு என்று சொன்னால் மட்டும் போதாது.
உறவின் வேரு என்றாலும் தீராது.
சொந்தம் பந்தம் சேர்ந்து வாழும் பூமி இது.
எந்த ஊரு வாழ்ந்தாலும் சாமி இது.

ஆலமரம் நிழல் போல எங்கள் கூட்டம்,
வாழும் ஒரு வட்டம் எங்கள் பூந் தோட்டம்.
தனிமரம் போல் ஒற்றையாக வாழ மாட்டோம்.
புனிதம் எங்கள் உறவில் நாங்கள் கலையவும் மாடோம்.

கோவில் இல்லா ஊருங்கூட இருந்தும் இருக்கும்.
குல சாமி இல்லா சொந்தம்  மறந்தும் இருக்கும்.
வாழ்வில் ஒரு வரம் பெற்றால் என்ன இருக்கும்!
சாவில் அதை வந்து பாரு புரிந்தும் இருக்கும்.

உலகுக் கெல்லாம் சோறு போடும் உழவுத் தொழிலால்,
வழங்கி வாழும் வள்ளல் நாங்கள் உள்ளம் எழிலால்.
மரபு வழி ஒழுக்கம் அதில் மாறவும் இல்லை.
உறவின் வேரு ஊரு இதை 
மீறவும் இல்லை.

கொ.பெ.பிச்சையா.






Sunday, 9 February 2025

அற்பம் BUTஅற்புதம் வாழ்க்கை

அற்பம் but அற்புதம்.

அற்பம் ஆனாலும் அற்புதம்.
சொற்பம் ஆனாலும் சொற்கம்.
வாழும் வரைதான் வாழ்க்கை.
வாழ்க அதுவரை இயற்கை!

இயற்கை படைத்த படைப்பு.
இரகசியம் அதற்குள் அடைப்பு.
வந்த வழிதான் தெரிரியும்.
போவது எவற்குப் புரியும்?

வந்த நேரத்தின் குறிப்பு,
வருடம் வயதின் அமைப்பு.
எந்த நேரத்தில் மரிப்பு,!
என்பது இரகசியம் மறைப்பு.

வருவதை முன்னமே எவரறிந்தார்?
இருப்பதும் இன்னுமே எவர் கணித்தார்?
வருவதும் போவதும் யாரறிவார்?
வாழ்ந்தால்  சொல்லும் வரலாறு.

காலம் படைக்கும் வரலாறு.
நாளும் பதிக்கும் உன் பேரு.
வாழுங் காலம் கொஞ்சம் தான்,
யாருக்கும் நம்மால் வஞ்சம் ஏன்?

வாழவைத்து வாழ்வதாம்,
வாழ்க்கையது இயற்கையாம்.
எடுத்து வாழாமல் கொடுத்து வாழ்க!
அடுத்த பிறவியும் அதுவாக வாழ்கவே!

கொ.பெ.பிச்சையா.






Wednesday, 5 February 2025

பயம் பாவம்.


புதிய கீதை 6 (பயம் பாவம்)

பயமென்பது தன்வயம் அற்றலையும்  மனமே!
நயமெது என்றாய நின்றுதவாக் குணமே!
முயன்றுந் தெளிய முயலாத் துணிவே!
இயன்றதன் நம்பிக்கை இல்லாத்தனமே!

வாஞ்சையில் விஞ்சியும், வாக்கினால் பொய்க்கவும்,
தீய்ந்ததீ போன்றும்நீ ! ஓய்ந்தும்ஏன் நீருவதோ?
ஊஞ்சலாய் உள்மனம் ஒன்றினில் நில்லாதும்
ஆய்ந்த பயத்தினால் அல்லலும் கொள்ளுவதோ!

தர்மத்தில் தப்பான் தனதுற வாகினும்
கர்மத்தின் பாவம் கட்டுண்ட பயம்தான்.
அதர்மம் பழகுவதும் அவர்பின் தொடர்வதுவும்,
விதம்படும் பாவத்தின் விலை யென்ன நேருமோ!

பொய்யும் புரட்டும் பொல்லாத ஊழலும்
செய்யும் அரசியல் சீர்கெடும் ஆளலும்,
கைகள் மடக்கும் மெய்யும் முடக்கும்.
செய்வினைப் பாவம் தீவினைப் பிடிக்கும்.

தீவினை கண்டும் திடமிலா மனமே!
நேர்வினை ஒஞ்சும் நெறியிலாக் குணமே!
ஊழ்வினை என்ன உன்னையும் விடுமோ!
ஆள்வினை அஞ்சும் அறிவிலாப் பயமோ!

அடிமை பழகிநீ அஞ்சியே வாழ்ந்தாய்].
மடமை மூழ்கிநீ கெஞ்சியே தாழ்ந்தாய்
அதிகாரம் படிந்துநீ ஆளுமை இழந்தாய்
உரிமை மறந்துநீ நிழலாய் அலைந்தாய்.

பயந்து பணிந்தினி பாழ்பட வேண்டாம்
தயங்கித் துணிவினில் தாழ்வுற வேண்டாம்.
இறப்ப தொருநாள் உறுதி என்றோ ஆகட்டும்.
பிறப்ப தினியில்லை பேய்களை ஓட்டுவோம்.

கொ.பெ.பி.அய்யா.

அச்சம் தவிர்!





Tuesday, 4 February 2025

பொய்யான வாழ்க்கை.


பொய்யான உறவுகள். 

தேடும் போதுத் தான் மறைந்து ஓடி ஒளிந்த சொந்தம் அது,
தேடி வந்து நாதி யெனக் 
கூடிக் கொஞ்சும் தேவைக்கு.
இரக்கம் உருக்கிக் கெஞ்சிடும் 
உறவு சொல்லிக் கொஞ்சிடும்.
பெருக்கத்தில் உறவணையும்.
நெருக்கடியில் விட்டொழிக்கும்.

நாதி யற்று வீழும் போது 
சாதி தொட்டு உதவாது. 
சாதி விட்டுப் போகும் போது நாதி கிட்டே நெருங்காது.. 
நாதி யென்ன! சாதியென்ன! ஏதும் உன்னைச் சீண்டாது.
பணம் காக்குஞ் சாதி நாதி
இனம் உன்னைத் தீண்டாது.

பிணம்கூட மெய்யாட்டும். பணம் என்றால் கைநீட்டும்.
வனம் ஏகிப் போகும் போதும் இரதம் ஏறத் தான் நழுவும். 
பற்றுப் பந்தம் சுற்றமெல்லாம் பகலாடும் வேசம் மோசம்.
ஓட்டவந்தச் சொந்தமெல்லாம் 
கட்டம் என்றால் ஓடும் கூட்டம்.

இருக்கும் போது பட்டினியில்  வருந்த வைத்தச் சொந்தங்கள்.
இறந்தப் பின்னே மேளதாளம் வெடி முழக்கும் நாடகம்.
ஊரு மெச்ச பூந்தேரும் 
ஊர்க் கோலம் எதற்கோ!
புழுத்து நாறும் பிணம் தொலைக்க
இழுத்துச் சேரும் ஆட்கள் அதற்கோ!

பொய்யான உறவுகளை மெய்யென்றும் நம்பாதே! 
மெய்யாக உழைத்தப் பாடு பொய்யரிடம் சொல்லாதே! 
இயன்றவரை இருந்துவிட்டு, அயரும் போது காப்பகம்;
தேடி முயன்ற பொருளெல்லாம் நாடி ஈந்தால் புண்ணியம். 

கொ.பெ.பிச்சையா. .

Monday, 3 February 2025

ஆடும் பம்பரம்.


ஆடும் பம்பரம்.

படைப்பெல்லாம் பம்பரமே பகவானால் ஆடிடுமே!
ஆட்டுவிப்போன் சுழட்டாமல்  ஆடாது பம்பரமே!
எந்நாளோ அந்நாளே எவறிவார் இரகசியமே!
சொன்னாலோ என்னாகும் அவனறிவான் அவசியமே!

சுழற்றி விட்டால் பூமியில் சுழன்றாடும் பம்பரம்!
தட்டி விட்டால் தரையிலே தள்ளாடும் பம்பரம்.
பற்ற வொரு இடமுண்டு 
பரமனவன் அடியுண்டு.
பற்றுகப் பற்றினை உற்றவன் நிழல் ஒன்றினை.

ஆட்டி விட்ட ஆண்டவன் அவனே ஆட்டுவான்.
ஆடும் போது மாற்று விசை அவனே மாற்றுவான்.
ஆடும் விதம் அவன் விதம் அவனே ஆக்குவான்.
ஆசை மனம் அடங்கிட அவனடி 
தேக்கு வான்.

ஆடும் வரை ஆடும் முறை ஞான மென்கிறார்.
தேடும் வழி கூடுமிடம் மோன மென்கிறார்.
நிறை விடம் அவனிழல் நித்திரை என்கிறார்.
 இறை யடி நம்பிக்கை வாழ்வியல் என்கிறார்.

மூடமெனும் சுயநல மெல்லாம் முடிந்து சாகட்டும்.
வேடமெனும் வாழ்வு எல்லாம் கலைந்து ஆகட்டும்.
பாடமெனப் பழகியதெல்லாம்
ஆடி அடங்கட்டும்.
பாவமென அறிந்த தெல்லாம் அருகி ஒழியட்டும்.

பழியென நெஞ்சறிந்தால் பழகத் துணியாது.
பக்தியெனப் பயமிருந்தால்
பாவம் செய்யாது.
நோக்க மென ஒன்றிருந்தால்
மார்க்கம் மாறாது.
மார்க்க மென மனதிருந்தால்
மயங்கித் தப்பாது.

ஒழுங்கு சட்டம் திட்டங்காக்கப் புறக்காவலே!
ஒழுக்கம் விளக்கம் தீர்வாற்ற அகக்காவலே!
பகுத்தறிந்தால் அகக்காவல் பக்தி ஒழுக்கமே!
பக்தி விட்டே ஒழுக்கம் கெட்டுப் பண்புங் கெட்டதே!

இயற்கைதான் மூலமென போற்றி வாழுவோம்.
செயற்கையின் சேதம்தனை மாற்றித் தேறுவோம்..
இயற்கைதான் இறையெனவும் மார்க்கம் பழகுவோம்.
செயற்கையை வரமெனவும் ஏற்று வணங்குவோம்.

பகுத்தறிந்து பக்தி கொண்டு 
ஞானம் பெறுவோம்.
தொகுத்தறிந்து புதுமைகள் கண்டு புகுத்துவோம்.
வகுத்து வைத்த பழமைகளை பாதுகாப்போம்.
நிறுத்தி நல்ல வழமைகளை 
நெறியென வாழுவோம்.

எதுஅறிவு எதுதெளிவு என்றே தேடுவோம்.
எதுபுரிதல் எதுதெரிதல் நன்றே நாடுவோம்..
மலர்ச்சி யென்றும் ஒன்றில் ஒன்றே கூடாமல்,
மாறும் முயற்சி வளர்ச்சி யென்றே மயங்காமல்
விளங்கி நன்றும் ஒன்றாம் 
தேர்ந்தே வாழுவோம்.

கொ.பெ.பிச்சையா.

புதிய அவதாரம்



புதிய கீதை.(1) இன்னொரு வேதம்.

உன்னையே நீயும் உனக்குள்ளே தேடென்றே
வெண்ணைத் திருடன் விளக்கிய கீதையே
கண்ணைத் திறந்தது காண்டீபன் வில்லையே
மண்ணைப் புதுப்பித்தும் மாற்றமும் கண்டதே.

விவிலியம் குரான் விளக்கும் மறைகள்,
அவசரம் கூறிடும் அற்புத நெறிகள்.
அவதார அவசியம் ஆற்றும் குறிகள்
நவயுகம் செய்யும் நீதியின் மொழிகள்.

கீதை விவிலியம் குர்ரான் புனிதமே!
பாதை பழக்கிய பண்பினை நனிதமே!
ஆதி முதலது அன்பினை அமைக்குமே!
வேதம் அதுதான் என்பதை சமைக்குமே!

தர்மம் உலகில் தள்ளாடும் பொழுதெலாம்,
அதர்மம் கலக்கி உள்ளாடும் பொழுதெலாம்
துர்மம் அழிக்கத் தோன்றிப் பிறக்குமாம்.
கர்மம் விளக்கப் புதியதாய் அவதாரங்கள்.

அதர்மம் அழித்த அவதாரம் கண்ணன்.
அநீதி ஒழித்த அவசியம் ஏசன்.
ஈகை இரக்கம் எனவந்த நபிகள்.
ஆகமம் தந்தும் அகிலம் அமைத்தனர்.  

தாயைப் பழித்திடும் பாவம் படர்வதும்,
சேயை ருசிக்கும் அவலம் தொடர்வதும்,
கொள்ளை கொலையும் கொடிய தீவினைகள்
வெல்லவும் மீள்வர்
வல்ல வினை மீட்பர்.
  
பாவமோ தர்மம்! பலியிடும் சாபமோ!
கோபமோ வேதம்! கொலைபடும் நாசமோ!
இன்னோர் இறையோன் 
மீட்சியும் மெய்யாமே!
பின்னொரு வேதம் புரட்சியும்!செய்யுமே!

கொ.பெ.பிச்சையா.

 


தொட்டில் குழந்தை.

அரசின் வாரிசு. 

நாயோ!பேயோ!தெரியல.
தாயவள் இழந்தது யாரிடமோ!
சேயுன்னைப் பெத்தது தாயெவளோ!-பாவம்
நீயென்ன செய்தாய் எவர் சதியோ!

மனித விலங்குகள் வெறிக் கூட்டம்.
புனிதக் காமம் போற்றா ஆட்டம்.
தூயவள் பாவம் தாயானாள்.
சீயெனக் கருவின் சேய் நீயோ!

தாயே தன்னை இழந்தாளோ!
சேயே உன்னால் இறந்தாளோ!
பேயது உழுதும் முளைத்தாயோ!
வாயில் அழுதும் பிழைத்தாயோ!

உளுத்த மனத்து மிருகங்கள்.
இழிந்த இனத்து உருவங்கள்
பழித்த செயலின் பாவங்கள்.
அழுவது நீயென்ன நியாயங்கள்?

தாய்மை மதியாத் தறுதலைகள்.
காம வேட்டை வெறியர்களைத்
தேடி அழிக்கச் சட்டங்கள்
தேர்தல் அறிக்கை ஏற்றுங்கள்.

தொட்டில்க் குழந்தைத் திட்டமது
பட்டது அம்மாவின் மனதிலது.
திரியும் அனாதைக்கு யார் நாதி?
அரசின் வாரிசுக்கு இலை சாதி.

சமூகம் பழிப்பது விதியம்மா.
அறிமுகம் சமூகச் சதியம்மா.
தப்பென்ன செய்தாய் நீயம்மா.
குப்பையில் விளைந்தநீ முத்தம்மா.

அம்மாத் தமிழே வருவாளே!
அள்ளி முத்தம் தருவாளே!
தமிழின் உரிமைத் திருவே நீ
அமிழ்தே அரசின் வாரிசு நீ!

கொ.பெ.பிச்சையா.





வரவும் செலவும்‌ வாழ்வும் தாழ்வும்.


புதிய கீதை
வரவும் செலவும் வாழ்வும் தாழ்வும்.

யாருக் காக மனிதா நீ!
யாரது வாழ்வும் மனிதா நீ! 
கூறெதுச் சொந்தம் மனிதா நீ! 
நேரெது வாழ்வும் தாழ்வும் மனிதா நீ!
வரவும் செலவும் சீரோ மனிதா நீ!

இரத்தச் சொந்தம் நம்பிக்கை
சுற்றப் பந்தம் எண்ணிக்கை,
சொத்தும் பற்றும் கணக்கிட்டே
சுற்றம் கூடும் சுடு காட்டே.

அன்புச் சொந்தம் வரவாகும்.
அன்பிலாதது செலவாகும்.
சுற்றம் பந்தம் உறவெல்லாம் 
வரவும் செலவும் போலாகும்.

உறவே பொய்யாம் உலகம்.
வரவும் செலவும் வாழ்வாம்
இரத்தம் எத்தனை இனமோ! அத்தனைப் பிரிவுக் குணமோ!

நிறமோத் தரமோ இனமோ!
மனிதர் எத்தனைக் குணமோ!
இனமென மனிதம் ஒன்றாம்.
பிணத்திற் கேது ஊராம் பேராம்! 

அண்ணந்தம்பி அக்கா தங்கை,
மனைவி பிள்ளைப் பேரரோ!
எண்ணுமுறவு எல்லாம் எங்கே?
மண்ணில் நெருப்பு உண்ணும் போதங்கே!
 .
உரிமைத் தர்மம் ஆளுவோம்.
கடமைக் கருமம் வாழுவோம்.
மனிதம் புனிதம் போற்றுவோம்
இறையென உலகம் 
வாழ்த்துமே!

உயிர்கள் சொந்தம் ஓர்உறவே!
உலகம் வீடாம் ஒரு குலமே!
நாடும் வீடும் பொது நிலமே!
கூடி வாழ்வோம் நன்மையே!

அச்சம் அஞ்சும் பகைமையும் 
எச்சம் இன்றி அழிந்திடும்.
உச்சம் மிஞ்சும் வளமையே
நிச்சய மாகிச் செழித்திடும்.

யாரும் யார்க்கும் ஆளில்லை.
வாழ உழைத்தல் பேதமில்லை.
சோறுஞ் சுபமும் பொது வாகி
தேறும் உலகில் சாதி யில்லை.

வந்ததாய் வாழ்ந்ததாய் பதிவென்ன! 
தந்தது அடையாளம்  நிசமென்ன!
விருந்தாளி யெல்லாம் வாழ்ந்தாரில்லை.
வரலா றொன்றே வாழ்ந்தார் சொல்லும்.

கொ.பெ.பிச்சையா.




நீதி எங்கே?

நீதி எங்கே?

கொதித்துத் துடிக்குது உண்மைகள்.
குளிர்ந்து கிடைப்பது எப்போது?
மிதித்துக் கிடக்குது நன்மைகள்.
மதிக்க நடப்பது எப்போது?

கண்ணைக் கட்டிக் கொண்டாள்.
காந்தாரி போல் நீதிமகள்.
என்னதான் நடக்குது இங்கே?
பண்ணுவ தெல்லாம் பணந்  தானிங்கே!

எண்ணும் மெய் நீதி எங்கே?
சொல்லும் பொய் சாட்சி யங்கே! .
உண்மை வெல்லும் காலம் எப்போ?
நன்மை சொல்லும் நாளும் அப்போ.

மக்கள் சக்தி ஒன்று சேரும்?
மனம் விளங்கி வென்று தீரும்.
அக்காலம் தான் சாமியும் பேசும்.
எக்காளம் ஊதி நீதி வாழ்த்தும்.

“யதா யதாஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத்யா
அப்யுத்தாநம அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ரஜாம்யஹம்
பரித்ராணாய சாதுநாம் விநாசாய ச சதுஸ்க்ரதாம்
தர்மசன்ஸ்தாபனாய சம்பவாமி யுகே யுகே "

எங்கெல்லாம் தர்மம் அழிகிறதோ!
அங்கெல்லாம் அதர்மம் தலை தூக்கும். 
மீண்டும்
தர்மம் காக்கவும் அதர்மம் அழிக்கவும். 
வேண்டும் போது நான் மீண்டும் பிறந்து வருவேன்.

 இது கிருஷ்ணன் சொன்னது.
பகவான் கீதை என்பது.

கொ.பெ.பி.அய்யா.

ஊளையிடுவான் கோழை.


ஊளையிடுவான் கோழை.

அன்றவன் போன தெங்கே?
இன்றவன் புலம்ப லிங்கே!
அன்றவன் ஒத் தூதினான்.
இன்றவன் வெத் தூதுகிறான்.

ஆயுதம் மறைத் திருப்பான்
ஆகும் பயன் வைத்திருப்பான். 
சாயும் வேளை ஆனபின்னே
சங்கூதும் கோழை யவன்.

ஆகாதப் பேச்சுப் பேசி
ஆண்மையைத் தொலைத்தவன்.
உழைத்தவன் வளர்ச்சியிலே
ஊளையிடுங் கோழையவன்.

அதிகாரம் கொண்டவன்.
ஆனாலும் சண்டியவன்.
விதியெனத் தூங்கி விட்டு
சதியென்பான் கோழையவன்

திரியோதனச் சதிகாரன்
வெறியாட்டம் அதிகாரன்.
கர்ணயப் பாவம் செய்வான்
கொலைகாரக் கோழையவன்.

தர்மங்கள் பேசுவான்
தர்மங் காணக் கூசுவான்.
பீஸ்மனாய் பாவங்கண்டும்
பாராமுகன் கோழையவன்.

நேர்நின்று போர்ச் செய்யான்.
போர்கண்டு ஊர் செல்வான்.
பேர்கொண்டு புகழ் வெல்லான்
கூர் மழுங்கிய கோழையவன்.

வீரெனென்று முழங்குவான்.
தீரம் கண்டு கலங்குவான்.
புறம்கூறி பேதைப்போல்
நிறம்மாறிக் கோழையவன்.

எதிர் வென்று வாழாதான்
இசைந் தெங்கும் சேராதான்.
இனங் கொன்று வாழ்பவன்
மனங் கொன்ற கோழையவன்.

தன்னின்பம் தானென்பான்.
மண்கனிமம் களவு செய்வான்.
பொய்மையிற் புகழ் சேர்ப்பான்.
மெய்மையிற் கோழையவன்.

தம்பி எனக் கூவுவான்.
தன்முதுகும் நம்பாதான்.
நம்பியாரை நம்பாதான்.
வெம்பிக் கெடும் 
கோழையவன்.

டயட் ரன் கொ.பெ.பி.அய்யா.


கோழையாய் வாழாதே!



புதிய கீதை (2) கோழையாய் வாழாதே

ஏழையாக வாழ்ந்தாலும் கோழையாக மாளாதே!
ஏழையாகி மாண்டாலும் கோழையாகி வாழாதே!
கோழையாக வாழ்ந்தாலும்
குற்றந் துணை போகாதே!

ஏழையாக வாழ்வதும் இயல்பிலே இன்பமே!
கோழையாக வாழ்வதோ! கொடுமையாம் துன்பமே!
ஏழை யவன் மனதென்றும் 
இலலாமை ஏங்காது.
இவ்வளவே வாழ்க்கையென
அவ்வளவே ஆறி வாழும்.

கொலையும் கொள்ளையும் கோழையின் மனக்கணக்கு.
எதிர்கொள்ளும் வலிமையும் எட்டாதான் குணப் பிணக்கு!

அஞ்சுவது அஞ்சாமைக் கேடித்தனம்.
அஞ்சியஞ்சி வாழ்வதும் பேடித்தனம்.
பதுக்கும் விலையேற்றம் பாவியர் கோழைத்தனம்!
பாவம் அறியாதான் 
யாவும் தெரியாத்தனம்

கள்ளமாய் ஓட்டுறுதி,
கையூட்டுப் பொய்யுறுதி,
செல்லாத வாக்குறுதி,
சொல்லாத ஏய்ப்புறுதி,.

அலங்காரப் பேச்சுறுதி,
வாணிப நோக்குறுதி,
ஏழைக் குதவா விதியுறுதி,
கோழைத் தனம் அரசுறுதி.

காதல் மொழிந்து கனிய விழைந்தும்.
ஈதல் இணைந்து இனியக் கலந்தும்.
பேதம் மறந்த பிழையாக் கற்பும்
சாதா வாழ்வும் முயலாது கோழை.

வன்மை யதுவும் வீரமும் அல்லவாம்.
நன்மை யதனால் நேர்வதும் அல்லவாம்.
சிறுமைச் செயலால் எதுபெற் றாலுமே
கொடுமை அதுவொரு கோழைமை யாகுமே!.

கோழைமை அதன்வழி ஆவது அதர்மம்.
வாழும் தகுதி ஆவது தர்மம்.
கோழை ஊளை கேளாது தாண்டும்,
நாளை உலகம் நலம்பெற வேண்டும்.

கொ.பெ.பிச்சையா.
   

   


Sunday, 2 February 2025

பாவம் பழி தீர்கும்.


பாவம் பழிதீர்க்கும்!

பாவிகளே! பாவிகளே! சிங்களப் பாவிகளே!
பாவம் சும்மா விடுமோடா! சண்டாளப் பேய்களே!
சாபம் என்றும் பொய்க்காது.
சாவும் ஒன்றும் வீணாகாது.
தீபம் அதுவும் தீயும்முன்...
தீ விழுங்காமத் தீராது..

உயிரோடு விளையாட்டா! உதிரம் கொதிக்குதடா.
உயிரென்ன மயிராடா!உதிர்வதைப் பொறுத்திருக்க!
கொன்ற உயிர் கோடியோ!
குவிந்த உடல் வானமோ!
என்ன நீ சாதித்தாய்? 
இன்னும் என்ன வெறியுனக்கு?

தமிழன் என்ன தற்குறியா? 
தான் தோன்றிக் தறுதலையா?
தமிழச்சித் தந்த பால்
உமிழ்ந்தூட்டிய எச்சிலோ!
தொப்புள்க் கொடி உறவுகள்
துள்ளு மறிப் பலிகளாக
எப்படிப் பொறுத்திருப்பான்!
அப்படியாக் கோழையவன்?

தர்மத்தின் திருவுருவன். 
சர்வ வல்லமை சமயோசிதன்.
கர்மத்தின் கதைமுடிக்க் காத்திருக்கும் காலன் அவன்.
கலிகாரக் கயவனே! கணக்குண்டு காத்திரு!
பதிலென்னக் கூறுவாய், பலிகொண்ட உயிர்களுக்கு?

விதியென்ன ஆறுமோ! வினையறுக்கக் காத்திரு!
வெள்ளையர்க்கே 
கொள்ளி  வைத்த,
வீரத்தமிழ் புதல்வருக்கு;
புள்ளியொரு சல்லி நீ.
சொல்லி உன்னை
அடிப்போமடா.

போடுந்தூக்கு நாயுனக்கு,
ஆடிஆடித் தொங்குதடா!
எண்ணுதற்கும் தூரமில்லை ஏவிடவும் கணையுனக்கு.
பின்னெதற்காம் யோசனை! 
இன்னும் எங்கள் உயிர்க் ளங்கே
இருப்பதொரு காரணம்.

கோடிக்கோடி உயிர்களை கொண்டமகா சக்தியாம்,
கூடிக்கூடிக் குலத்தினை
தேடித்தேடி அழித்தாலும் மீண்டும் மீண்டும்தழைக்குமே!
ஓடிஓடி ஒளிந்தாலும் 
உனக்கு இடம் ஏதடா?

சூலம் பாய்ந்து வருகுதோ! காலம் பழி தீர்ப்பதற்கு.
நாளும் கூடித் தீர்ப்பினை வேளையொன்றில் எழுதுமே!
பாவம்பழி ஆறாது.
சாபம் பலி சோராது.
தவம் ஏற்றுக் கதை முடிக்கும்.

கொ.பெ.பிச்சையா.