வரவும் செலவும் வாழ்வும் தாழ்வும்.
யாருக் காக மனிதா நீ!
யாரது வாழ்வும் மனிதா நீ!
கூறெதுச் சொந்தம் மனிதா நீ!
நேரெது வாழ்வும் தாழ்வும் மனிதா நீ!
வரவும் செலவும் சீரோ மனிதா நீ!
இரத்தச் சொந்தம் நம்பிக்கை
சுற்றப் பந்தம் எண்ணிக்கை,
சொத்தும் பற்றும் கணக்கிட்டே
சுற்றம் கூடும் சுடு காட்டே.
அன்புச் சொந்தம் வரவாகும்.
அன்பிலாதது செலவாகும்.
சுற்றம் பந்தம் உறவெல்லாம்
வரவும் செலவும் போலாகும்.
உறவே பொய்யாம் உலகம்.
வரவும் செலவும் வாழ்வாம்
இரத்தம் எத்தனை இனமோ! அத்தனைப் பிரிவுக் குணமோ!
நிறமோத் தரமோ இனமோ!
மனிதர் எத்தனைக் குணமோ!
இனமென மனிதம் ஒன்றாம்.
பிணத்திற் கேது ஊராம் பேராம்!
அண்ணந்தம்பி அக்கா தங்கை,
மனைவி பிள்ளைப் பேரரோ!
எண்ணுமுறவு எல்லாம் எங்கே?
மண்ணில் நெருப்பு உண்ணும் போதங்கே!
.
உரிமைத் தர்மம் ஆளுவோம்.
கடமைக் கருமம் வாழுவோம்.
மனிதம் புனிதம் போற்றுவோம்
இறையென உலகம்
வாழ்த்துமே!
உயிர்கள் சொந்தம் ஓர்உறவே!
உலகம் வீடாம் ஒரு குலமே!
நாடும் வீடும் பொது நிலமே!
கூடி வாழ்வோம் நன்மையே!
அச்சம் அஞ்சும் பகைமையும்
எச்சம் இன்றி அழிந்திடும்.
உச்சம் மிஞ்சும் வளமையே
நிச்சய மாகிச் செழித்திடும்.
யாரும் யார்க்கும் ஆளில்லை.
வாழ உழைத்தல் பேதமில்லை.
சோறுஞ் சுபமும் பொது வாகி
தேறும் உலகில் சாதி யில்லை.
வந்ததாய் வாழ்ந்ததாய் பதிவென்ன!
தந்தது அடையாளம் நிசமென்ன!
விருந்தாளி யெல்லாம் வாழ்ந்தாரில்லை.
வரலா றொன்றே வாழ்ந்தார் சொல்லும்.
கொ.பெ.பிச்சையா.
.jpg)
No comments:
Post a Comment