தேடி வந்து நாதி யெனக்
கூடிக் கொஞ்சும் தேவைக்கு.
இரக்கம் உருக்கிக் கெஞ்சிடும்
இரக்கம் உருக்கிக் கெஞ்சிடும்
உறவு சொல்லிக் கொஞ்சிடும்.
பெருக்கத்தில் உறவணையும்.
பெருக்கத்தில் உறவணையும்.
நெருக்கடியில் விட்டொழிக்கும்.
நாதி யற்று வீழும் போது
சாதி தொட்டு உதவாது.
சாதி விட்டுப் போகும் போது நாதி கிட்டே நெருங்காது..
நாதி யென்ன! சாதியென்ன! ஏதும் உன்னைச் சீண்டாது.
சாதி விட்டுப் போகும் போது நாதி கிட்டே நெருங்காது..
நாதி யென்ன! சாதியென்ன! ஏதும் உன்னைச் சீண்டாது.
பணம் காக்குஞ் சாதி நாதி
இனம் உன்னைத் தீண்டாது.
பிணம்கூட மெய்யாட்டும். பணம் என்றால் கைநீட்டும்.
வனம் ஏகிப் போகும் போதும் இரதம் ஏறத் தான் நழுவும்.
பற்றுப் பந்தம் சுற்றமெல்லாம் பகலாடும் வேசம் மோசம்.
ஓட்டவந்தச் சொந்தமெல்லாம்
கட்டம் என்றால் ஓடும் கூட்டம்.
இருக்கும் போது பட்டினியில் வருந்த வைத்தச் சொந்தங்கள்.
இறந்தப் பின்னே மேளதாளம் வெடி முழக்கும் நாடகம்.
ஊரு மெச்ச பூந்தேரும்
இருக்கும் போது பட்டினியில் வருந்த வைத்தச் சொந்தங்கள்.
இறந்தப் பின்னே மேளதாளம் வெடி முழக்கும் நாடகம்.
ஊரு மெச்ச பூந்தேரும்
ஊர்க் கோலம் எதற்கோ!
புழுத்து நாறும் பிணம் தொலைக்க
இழுத்துச் சேரும் ஆட்கள் அதற்கோ!
பொய்யான உறவுகளை மெய்யென்றும் நம்பாதே!
மெய்யாக உழைத்தப் பாடு பொய்யரிடம் சொல்லாதே!
இயன்றவரை இருந்துவிட்டு, அயரும் போது காப்பகம்;
தேடி முயன்ற பொருளெல்லாம் நாடி ஈந்தால் புண்ணியம்.
பொய்யான உறவுகளை மெய்யென்றும் நம்பாதே!
மெய்யாக உழைத்தப் பாடு பொய்யரிடம் சொல்லாதே!
இயன்றவரை இருந்துவிட்டு, அயரும் போது காப்பகம்;
தேடி முயன்ற பொருளெல்லாம் நாடி ஈந்தால் புண்ணியம்.
கொ.பெ.பிச்சையா. .

No comments:
Post a Comment